பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்
பாகம் - 3
பி.ஜெய்னுலாபிதீனும் அற்புத விளக்கமும் :
S.P. பட்டணம் பிரச்சினைக்கு அண்ணன் பி.ஜெ. முந்திக்கொண்டு உருவாக்கிய பிரம்மை இரண்டு :
1. சயீது ஹாஜியாரும் அவரது துணைவியாரும் சொந்தமாக செலவு செய்து கட்டிய பள்ளியை அண்ணன் பி.ஜெ.யின் தமிழ்நா(ட்)டு தவிஹீது ஜமாத்தினருக்கு எழுதி கொடுத்துவிட்டார். ஆதாரம் பத்திர நகலை தூக்கி காட்டும் அண்ணன் பி.ஜெ.யின் படம்.
2. அவ்வாறு தங்கள் வசம் ஒப்படைத்ததை ஊர் ஜமாத்தினர் (சுன்னத் வல் ஜமாத்தினர்) பலவந்தமாக அபகரிக்க நாடுகின்றனர். அதற்கு ஒத்தாசையாக ஊர் MLA, காவல்துறை அதிகாரிகள், ஆர்.டி.ஓ. போன்றவர்கள் நடந்துகொள்கிறார்கள். இது நியாயமா ? ஆனால் ஊர் ஜமாத்தினர் சார்பாக லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த உண்மை நிலவரம் மற்றும் எதிர் கேள்விகளாலும் S.P. பட்டணம் பத்திர நகலை தூக்கி காட்டிய தனது மாவீரத்தனம் மாவாகிப் போனதாலும், சரியான பதில் சொல்ல முடியாமல் கேள்வி கேட்டவரையும், வெளியிட்டவரையும், சம்பந்தமில்லாதவரையும் ஏசியும் பேசியும் சம்பந்தமில்லாமல் பதில் சொல்லியிருப்பதன் மூலம் அவரது பலவேஷம் அம்பலம். அதனால்தான் ஆரம்ப போராட்டமாக அறிவிக்கப்பட்டது கடைசி போராட்டமாக மாறி அடக்கி வாசிக்கப்படுகிறது. தனது உயிரை பத்திரப்படுத்தி அடுத்தவர்களின் பல உயிர்களை கொடுப்போம் என கூறியவரும் இப்பொழுது உயிர்பலி கொடுக்காமல் இருப்பதும் அதனால்தான்.
ஊர் ஜமாத்தினர் சார்பு கேள்வியின் சாராம்சம் :
கேள்வி1 : மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான், கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக், திருச்சி சிங்காரத்தோப்பு ஆகிய பள்ளிவாசல்களை பள்ளிவாசல்களின் பத்திர நகல்களுக்கு சொந்தக்காரர்களான ஜாக் ஜமாத்தினரிடம் ஒப்படைக்காமல், S.P.பட்டணம் ஊர் ஜமாத்தினர் போல்( ?!) அநியாயமாக அபகரித்து வைத்திருப்பது ஏன் ?
கேள்வி2 : 1994-ம் வருடம் ஊர் மக்கள் சாட்சியாக இருக்க வக்ஃபு செய்து அதன் நிர்வாகத்தை ஊர் ஜமாத்திடம் ஒப்படைத்து வாய் மொழியாக வாக்கு தந்துவிட்டு பின் 2009-ம் வருடம் (ஜனவரி) அதனை எழுத்து மூலமாகவும் எழுதி வாக்கு கொடுத்தது இதே சயீது ஹாஜியார்தான். அப்பொழுதெல்லாம் தடுக்காமல் (தனது பெயரில் பத்திர நகல் இருந்தும்) மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என்ற அடிப்படையில் இருந்துவிட்டு, இப்பொழுது இது எனது சொத்து நான் யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பேன் என சயீது ஹாஜியாரின் துணைவியார் செய்வதும் அதற்கு அண்ணன் துணை போவதும் நபி வழியில் சரியா ? மேற்கண்ட கேள்விக்கு அண்ணன் பி.ஜெ. தந்த பதில் கீழே தரப்பட்டுள்ளது அதன் மேல் இரண்டு முறை கிளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கவும்.
பி.ஜெ.யின் விளக்கத்தின் குழப்பம் அதற்கு விளக்கம் : அண்ணன் பி.ஜெ.யின் ஒப்பீடு உப்பு சப்பில்லாதது. ஒருவர் தனது சொந்த இடத்தில் தனது சொந்த செலவில் பள்ளிவாசல் கட்டி தருகிறேன் என்று கூறினால் எந்த ஊர் ஜமாத்தினரும் தனது உடலாலும் பொருளாலும் உதவிசெய்யமாட்டார்கள் அது தேவையுமில்லை. இது ஊர் அறிந்த உண்மை. இன்னும் சற்று விளங்க வேண்டுமெனில் தமிழ்நா(ட்)டு தவ்ஹீத் ஜமாத்தினருக்கு ஒருவர் தனது சொந்த செலவில் சொந்த இடத்தில் பள்ளியோ, மதரசாவோ கட்டி தருகிறேன் என்று கூறினால், மனோஇச்சை.COM-லோ அல்லது ஏ…கத்துவோம்.COM-லோ “இறைஇல்லம் எழுப்ப வாரி வழங்குவீர்” என்று விளம்பரம் செய்வார்களா ? அல்லது தனது சொந்த சல்லிகளை கொடுப்பார்களா ? அதுமட்டுமல்ல எவ்வாறு ஊர் ஜமாத்தினரின் சல்லிகாசும் இல்லையோ அதுபோல்தான் தமிழ்நா(ட்)டு தவ்ஹீதுனரின் சல்லி காசும் கிடையாது. எனவே இரு தரப்பினருமே சம அந்தஸ்து உடையவர்கள்.
தனது போராட்டத்திற்கு மூலக்கருவாகவும் தாங்கள்தான் அப்பள்ளியின் சொந்தக்காரர்கள் என்பற்கு ஆதாரமாகவும் தங்களுக்கு எதிரானவர்களை வசைபாடுவதற்கு உதவியாகவும் இருந்தது தமிழ்நா(ட்)டு தவ்ஹீது பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட அப்பத்திரம்தான். அதனடிப்படையில் ஜாக் பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கும் மேற்படி மூன்று பள்ளிகளையும் ஏன் ஜாக் அமைப்பிடம் திருப்பி தரவில்லை ? என கேட்ட கேள்விக்கு உள்ள பதிலா இது. நல்லோர்கள் நடுநிலையாய் நின்று பார்க்கட்டும்.
மேலும் ஜாக் பள்ளிவாசல் கட்டுவதற்கு தமிழ்நா(ட்)டு தவ்ஹீது சகோதரர்கள் தனது உடலாலும் பொருளாலும் பாடுபட்டுள்ளனர். அதனால்தான் அபகரித்துகொண்டேன் என சொல்லாமல் சொல்லியிருப்பதன் மூலம் அண்ணன் பி.ஜெ. தனது முகத்திரை கிழிந்த பாதிப்பால் மூலை குழம்பியுள்ளார் என்பது தெளிவு. மேற்படி மூன்று பள்ளிகளையும் அண்ணன் பி.ஜெ. தமிழ்நா(ட்)டு தவ்ஹீது சார்பாக பணம் வசூலித்து மேற்படி பள்ளிவாசல்களில் எங்களுக்கும் சம உரிமை உண்டு என்று ஜாக் ஜமாத்திடம் ஒப்பந்தம் செய்துகொண்டு தனது உடலையும் உழைப்பையும் கொட்டவில்லை. மேலும் அண்ணன் பி.ஜெ. ஜாக் ஜமாத்தில் இருக்கும்போது, ஜாக் ஜமாத்தின் பில் கட்டுகளை பயன்படுத்தி வசூல்செய்யப்பட்டது. மக்களும் ஜாக் ஜமாத் பள்ளி என்ற நிய்யத்தில்தான் பணமும் கொடுக்கப்பட்டது. அதுமட்டுமல்ல எவ்வாறு தமிழ்நா(ட்)டு தவ்ஹீது ஜமாத்தினர் உழைத்தார்களோ அதுபோல்தான் ஜாக் ஜமாத்தினரும் உழைத்துள்ளனர். எனவே இருவரும் சம அந்தஸ்து உடையவர்கள்.
அதைவிட முக்கியம் ஜாக் ஜமாத்திலிருந்து அண்ணன் வெளியேறியதற்கு ஜாக் பொருப்பாளியல். அண்ணன் பி.ஜெ.தான் ஜாக் ஜமாத்துக்கு தலாக் சொல்லிவிட்டு தனக்கு தேவையில்லை என தூ… என துப்பிவிட்டு வெளியே வந்தார். பார்க்க வீடியோ கிளிப்.
இவராக வெளியேறியதற்கு ஜாக் பொருப்பாளியல்ல. இவர்தான் பொருப்பாளி. எனவே அண்ணனுக்கு கொஞ்சமாவது நீதி நேர்மை இருந்தால் பத்திர நகல் உள்ள ஜாக் ஜமாத்திடம் மேற்படி மூன்று பள்ளிகளையும் ஒப்படைக்கவேண்டும்.
அண்ணன் பி.ஜெ.யின் ஊர் ஜமாத் சார்பு இரண்டாவது கேள்விக்கான பதில் அவரது மூலைக்குழப்பத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடு. ஏற்கனவே வாய்மொழியாகவும் சமீபத்தில் எழுத்து மூலமாகவும் அப்பள்ளியின் நிர்வாகத்தை ஊர்ஜமாத்தினர் வசம் ஒப்படைத்ததை மீண்டும் அதில் (ஏற்கனவே அல்லாஹ்விற்காக வக்ஃபு செய்யப்பட்டது) உரிமை கொண்டாடி தனது கொடுத்த வாக்கை மீறியும் தானமாக கொடுத்ததை மீண்டும் பெரும் மூலமாகவும் சயீது ஹாஜியாரும் அவரது துணைவியாரும் நடந்து கொள்வது நபிவழிப்படி சரியா ? அதற்கு தமிழ்நா(ட்)டு தவ்ஹீது துணை போவது நபிவழிக்கு மாற்றமில்லையா ? என கருத்துப்பட கேட்ட கேள்விக்கு உள்ள பதிலா ? என்பதை உண்மையாளர்கள் சிந்திக்கட்டும்.
இன்னொரு அடிப்படையான விஷயமும் கவனிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் அண்ணன் பி.ஜெ.யின் போட்டி பள்ளிவாசல்கள் உள்ளது. அவற்றிலெல்லாம் தலையிடாத சுன்னத் வல் ஜமாத்தினர் S.P. பட்டிணம் பள்ளிவாசலில் உரிமை கொண்டாடுகிறார்கள் என்றால் அப்பள்ளியின் நிர்வாகத்தினர் ஊர் ஜமாத்தினர்தான் என்பது மறைமுக உண்மை. நேர்முக உண்மை இன்ஷா அல்லாஹ் கோர்ட் தீர்ப்பின் மூலம் வெளிப்படும்.
S.P.பட்டிணம் பள்ளிவாசல் நிலைப்பாட்டில் குர்ஆன் ஹதீஸ் அடுப்படையில் சயீது ஹாஜியாரும் அவரது துணைவியாரும் தான் எடுத்த வாந்தியை தானே சாப்பிடும் இழிநிலையில் உள்ளனர் (தவரை திருந்திக்கொண்டால் தவிர) அந்த வாந்தியைத்தான் அண்ணன் பி.ஜெ. சாப்பிட விரும்புகிறார். தனது கொள்கை சகோதரர்களையும் தனக்கு துணையாக அழைக்கிறார் என்பதுதான் உண்மை.
ஏமாற்றப்பட்ட கொள்கை சகோதரர்கள் :
அண்ணன் பி.ஜெ.யை எப்பவும்போல் நம்பி மழையென்றும் பாராமல் தனது குடும்பங்களோடு வீதியில் இறங்கி அவரது நபிவழிக்கெதிரான விஷயத்தில் கொள்கை சகோதரர்கள் அவருக்கு (அறியாமல்) ஆதரவளித்துள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.


நீங்கள் மெய்யை அறிந்து கொண்டே, அதனை மறைத்துப் பொய்யை மெய்யெனெப் புரட்டிவிட வேண்டாம். (அல் குர்ஆன் : 1 :2 :42)
இவன்
M.முஹம்மது பதுருதீன்.