Saturday 3 October 2009

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹிம்

S.P. பட்டணத்தில் பூதம் !

பாகம் – 2

சயீது ஹாஜியார் மற்றும் அவரது துணைவியார் செய்வது நபி முறைப்படி சரியா ?:

சயீது ஹாஜியார் மற்றும் அவரது துணைவியார் 11.8.2009 இமயம் டி.வி.யில் பேட்டி அளித்ததை மனோஇச்சை.com-ல் வெளியிட்டுள்ளனர்.அதில் எதிர் தரப்பினரை தரக்குறைவாக பேசியும், தான் செய்தது நபி முறைப்படி சரி என்பது போலவும் பேசியுள்ளார்கள்.

ஆனால் அவ்விருவரும் ஊர் ஜமாத்தினருக்கு கொடுத்த வாக்கும், எழுதி கொடுத்ததையும் தவறான வழிகாட்டுதலின் பேரில் மறைத்துள்ளனர் என்பது தெளிவாகின்றது.

வாய்மொழியாக தந்த வாக்கு :

1994 ஆம் வருடம் திறப்பு விழா நடத்தி ஊர் ஜமாத்தினர் பலநூறு மக்கள் முன்பு இப்பள்ளியை வக்ஃபு செய்வதாக அறிவித்தும், ஊர் ஜமாத்திடம் ஒப்படைத்தும் உள்ளார் சயீது ஹாஜியார்.

எழுத்து மூலமாக தந்த வாக்கு :

2009 ஜனவரி மாதம் பள்ளியின் பொருளாதாரத்திற்கு தான் பொருப்பு அதன் மற்ற காரியத்திற்கு ஊர் ஜமாத் பொருப்பு என எழுத்து மூலமாக வாக்கு தந்துள்ளார் சயீது ஹஜியார்.

1994 ஆம் வருடம்முதல் மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என மெளனமாக இருந்துவிட்டு இது எனது இடம் எனது இஷ்டப்படி யாருக்கு வேண்டுமானாலும் கொடுப்பேன் என இப்பொழுது கூறுவது நபி வழியா ? மனோஇச்சையா ?

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் வக்ஃபு செய்யப்படும்வரை அப்பள்ளியின் நில உரிமையாளராக ஹாஜியா அம்மத்தூர் ரஹீமாவும் கட்டிடம் கட்டிய கட்டிட உரிமையாளராக சயீது ஹாஜியார் என்பதில் மாற்று கருத்து இல்லை.ஆனால் எப்பொழுது வக்ஃபு செய்யப்பட்டுவிடுமோ (வக்ஃபு என்பது அல்லாஹ்விற்காக தானமாக கொடுத்து விடுவது) இப்பொழுது அது அல்லாஹ்வின் இல்லமாக அதாவது அதன் உரிமையாளனாக அல்லாஹ் ஆகிவிடுகின்றான். இப்பொழுது அது வக்ஃபு சொத்தாகவும் மாறிவிடுகிறது. அதன்பிறகு எனது சொத்து என்றோ, நான் கட்டிய பள்ளி என்றோ உரிமைகொண்டாட எவ்வித உரிமையும் இல்லை. அவ்வாறு அல்லாஹ்விற்காக தானமாக கொடுத்த பின் அதில் உரிமை கொண்டாடும் பட்சத்தில்,

யார் அல்லாஹ்வுக்காக பள்ளிவாசல் ஒன்றை கட்டுகிறாறோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் அதேபோன்று ஒன்றை கட்டுகிறான்.
நபிமொழி நூல் :முஸ்லிம்

என்ற நன்மையை இழப்பதோடு இம்மையிலும் மறுமையிலும் நமக்கு நாமே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டதாகிவிடும். அதுமட்டுமின்றி ஒரு முஸ்லிம் வாக்கு தந்தால் அதனை நிறைவேற்றுவது அவரின் மீது கடமையாகும். அது விஷயத்தில் அல்லாஹ்வும் அவனது ரசூலும் சொன்ன எச்சரிக்கையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(உண்மை) அவ்வாறன்று. எவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றி, (இறைவனுக்கு) பயந்து நடக்கின்றார்களோ, அவர்கள்தான், (குற்றம் பிடிக்கப் படமாட்டார்கள்.) நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) பயபக்தியுடையவர்களை நேசிக்கின்றான்.

எவர்கள் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதிகளையும், தங்களுடைய சத்தியங்களையும் சொற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ அவர்களுக்கு ;மறுமையில் நிச்சயமாக யாதொரு (நற்) பாக்கியமுமில்லை. அன்றி, அல்லாஹ் மறுமையில் அவர்களுடன் (விரும்பிப்) பேசவுமாட்டான். (அன்புடன்) அவர்களை இறுதிநானில் திரும்பிப் பார்க்கவுமாட்டான். அவர்களைப் புனிதப் படுத்தவுமாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுமுண்டு.
அல்குர்ஆன் : 3 :3 :76,77)


அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவிக்கிறார்கள். நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான். பேசும்போது பொய் பேசுவதும், வாக்குறுதியளித்தால் (அதற்கு) மாறு செய்வதும், ஒப்பந்தம் செய்தால் (நம்பிக்கை) மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும்தான் அவை. எவனிடம் இவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதைவிட்டுவிடும் வரை அவனுள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் :புஹாரி)

அதுமட்டுமல்ல ஒருபொருளை அல்லாஹ்விற்காக தானமாக கொடுத்துவிட்டு அதனை திரும்பப் பெற முயற்சிப்பதோ அல்லது அதில் உரிமை கொண்டாடுவதோ எவ்வளவு கேவலமான செயல் என்பதையும் நபி (ஸல்) எச்சரித்துள்ளார்கள்.

உமர் இப்னு கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்கள் : ஒரு குதிரையின் மீது ஒருவரை நான் இறைவழியில் (போரிடுவதற்காக) ஏற்றியனுப்பினேன். (அவருக்கே அதை தர்மமாக கொடுத்து விட்டேன்) அதை வைத்திருந்தவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கிவிட்டார். எனவே, அந்த குதிரையை அவரிடமிருந்து வாங்க விரும்பினேன். அவர் அதை விலை மலிவாக விற்று விடுவார் என்று எண்ணினேன். எனவே, நபி(ஸல்) அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன். அவர்கள் “ நீங்கள் அதை வாங்காதீர்கள், அவர் உங்களுக்கு அதை ஒரேயொரு திர்ஹமுக்குக் கொடுத்தாலும் சரியே ! ஏனெனில், தன் தருமத்தைத் திரும்பப் பெறுபவன், தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்” என்று கூறினார்கள்.
(நூல் :புஹாரி)

இந்த ஹதீஸில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் உமர்(ரலி) அவர்கள் தான் தானமாக கொடுத்த குதிரையை கொடு என்று கேட்கவில்லை. அவரின் பராமரிப்பு சரியில்லாததால் அது அவருடைய குதிரைதான் என கருதி அதனை பணம் கொடுத்து வாங்கத்தான் நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்கிறார்கள். ஆனால் நபி(ஸல்) அதனையும் தடை செய்து மேற்படி இது இழிவான செயல் என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள். தான் கொடுத்த வாக்கை மீறுவது மட்டுமின்றி தான் தானமாக அல்லாஹ்விற்காக கொடுத்த பள்ளிவாசலில் உரிமை கொண்டாடுவது நபி வழியா ? மனோஇச்சையா ? என்று இருவரும் அல்லாஹ்விற்காக யோசித்து ஒரு நல்ல முடிவை எடுப்பது இருவருக்கும் நல்லது.

சயீது ஹாஜியார் மற்றும் அவரது துணைவியாரின் செயல்பாட்டை இன்னும் சற்று தெளிவாக புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தைக் குறிப்பிடலாம். ஒருவர் பள்ளிவாசலுக்கு அல்லாஹ்விற்காக 4 டியூப்லைட்டுகள் மற்றும் 4 மின் விசிறிகள் தானமாக போடுகிறார். ஒருமாதம் கழித்து அதில் ஒரு டியூப்லைட்டையும் ஒரு மின் விசிறியையும் கழற்றி எடுத்துச் செல்கிறார் அதனைப் பார்த்த அப்பள்ளியின் நிர்வாகி ஏனப்பா இவ்வாறு செய்கிறாய் ? இது பள்ளிவாசலுக்குரியதாயிற்றே ? இவ்வாறு செய்வது கூடாது என தடுக்கிறார். ஆனால் அந்த நபரோ இது நான் வாங்கியது, எனக்கு சொந்தமானது இதோ எனது பெயரில் நான் வாங்கியதாக ரசீது உள்ளது. எனவே இதை நான் யாருக்கு விரும்புகின்றேனோ அவருக்கு இப்பொழுது கொடுப்பேன். என்று சொன்னால் அவரை என்னவென்று சொல்வது ? மேலும் அவர் செய்வது சரிதான் அவர் வாங்கியதாக அவர் பெயரில்தான் ரசீதும் உள்ளதே ! என்று அருகிலுள்ள மற்றொருவர் அந்நபருக்கு ஆதரவாக சொல்வாரானால் அவரையும் என்னவென்று சொல்வது ? இதைப்போன்றதுதான் சயீது ஹாஜியார்,அவரது துணைவியார் மற்றும் அண்ணன் பி.ஜெ.யின் செயல்பாடுகள் உள்ளது.

அல்லாஹ் ரசூலின் தவ்ஹீதுபடி ஒரு முஸ்லிம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவார். மேலும் நபி(ஸல்) கூறியபடி தனது வாந்தியை தானே சாப்பிடும் இழுநிலைக்கும் செல்லமாட்டார். எனவே சயீது ஹாஜியாரும் அவரது துணைவியாரும் அல்லாஹ் ரசூலின் தவ்ஹீதை பின்பற்றுவார்களா ? அல்லது அண்ணன் பி.ஜெ.யின் தமிழ்நா(ட்)டு தவ்ஹீதை பின்பற்றுவார்களா ? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

தொடர்ச்சி பாகம் – 3…

இவன்.
M.முஹம்மது பதுருதீன்.

No comments: