Wednesday 4 June 2008

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹிம்

அருள்மறையின் அற்புதங்கள்.

இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் ஹைதராபாத் நகரின் தப்பச்சபுத்ரா என்ற ஊரில் வசிக்கும் முஹம்மது ஃபாருக் என்பவரது வீட்டில் இருந்த 100 வருட பழமையான திருக்குர்ஆனை கரையான் அரித்து தின்றது. குர்ஆன் வைக்கப்பட்டிருந்த பெட்டி, உறை மற்றும் உருது மொழிபெயர்ப்பு உள்பட அனைத்தையும் தின்ற கரையான், அல்லாஹ் எம்மொழியில் குர்ஆனை இறக்கினானோ அந்த அரபு மொழியிலுள்ள இறைவாசகத்தை கரையான் அரிக்கவில்லை. இந் நிகழ்வு " இவ்வேதத்தை நாமே பாதுகாப்போம் " என்ற அல்லாஹ்வின் வாசகத்தை உண்மைபடுத்தும் சம்பவமாகும்.

இத்திருக்குர்ஆன் பொதுமக்கள் பார்வைக்காக 3 நாட்கள் ஹைதராபாத் நகரின் சன்சல்குடா என்ற ஊரில் உள்ள மஜ்லிஸ் பாஷா தஹ்ரீக் (MBT) அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

கீழ்கண்ட புகைப்படத்தில் இத்திருக்குர்ஆனை மெளலானா சையத் ஷா பத்ருத்தீன் காதிரி அல் ஜீலானி, டாகடர் காயம் கான், அம்ஜத் உல்லா கான் மற்றும் பலர் பார்வையிடுகின்றனர். மேலும் இத்திருக்குர்ஆனை பரிசோதித்து இச்சம்பவம் உண்மைதான் என்று சாலர் ஜங் அரும்பொருட்காட்சியகத்தைச் சார்ந்த உயரதிகாரிகள் சான்றிதழும் வழங்கியுள்ளனர்.

படத்தை பெரிதாக்கிப் பார்க்க அதன் மேல் இரண்டு முறை "கிளிக்" செய்யவும்.






அருள்மறையின் அற்புதங்கள் தொடரும் ...


இவன்.
முஹம்மது பதுருதீன்.