Sunday 8 February 2009

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அண்ணன் பி.ஜெ.யின் குழப்பமும் உலமாக்களின் விளக்கமும்!

அல்லாஹ்வின் பாதையாகிய தப்லீஃக் ஜமாஅத் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்றுவரை அதன் செயல்பாடு மற்றும் நோக்கத்தை குறைசொல்ல முடியாதோர் உலக ஆதாயங்கள், விதண்டாவாதங்கள் மற்றும் குறிப்பாக தப்லீகின் தஃலிம் கிதாபுகளில் (அமல்களின் சிறப்புகள்) சொல்லப்பட்ட இறைநல்அடியார்களின் வாழ்க்கையில் அல்லாஹ்வின் உதவியால் நடைபெற்ற சில அற்புத உண்மை சம்பவங்கள் ஆகியவைகளை காரணங்கள் காட்டி இந்த அல்லாஹ்வின் பாதையின் மீது குறை சொல்ல முற்படுகின்றனர்.

அந்த வரிசையில் அண்ணன் பி.ஜெ. கூறும் சடத்துவ குற்றச்சாட்டும் ஒன்று. அதனை கீழே உள்ள வீடியோ கிளிப்பில் கேட்கவும்.


பி.ஜெ.யின் குழப்பம் : மரணித்து சந்தூக்கில் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த ஒரு மகான் திடீரென சந்தூக்கில் இருந்து எழுந்து பெரியார்கள் ஒருபோதும் மரணிப்பதில்லை எனக் கூறி மீண்டும் படுத்துக் கொண்டதாக தஃலீம் தொகுப்பில் கூறப்பட்டுள்ளது.

உலமாக்களின் விளக்கம் : இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது தனது நல்லடியார்களின் மூலமும் இறைநேசச் செல்வர்களின் மூலமும் கராமத் எனப்படும் இது போன்ற அற்புத நிகழ்ச்சிகளை நடாத்திக் காட்டுவது சர்வலோக சக்தனென நாம் நம்பி ஏற்றிருக்கும் அல்லாஹ்வுக்கு ஒன்றும் முடியாத காரியமோ அது குர்ஆனுக்கு முரண்பட்டதோ அல்ல இது போன்ற சம்பவங்கள் வரலாற்றில் நிறையவே நடந்திருக்கின்றன. இமாம் இப்னு அபித் துன்யா (ரஹ்) அவர்கள் மரணித்த பின்னும் பேசிய இறைநேசச் செல்வர்களின் வரலாறுகளை ஒன்று திரட்டி " கிதாபு மன் ஆஷ பஃதல் மெளத்" (மரணித்த பின்னும் வாழ்ந்தவர்கள்) என்ற பெயரில் ஒரு தனி நூலையே எழுதியிருக்கிறார்கள். இமாம் பைஹகி அவர்கள் கூறுகிறார்கள் : மரணத்துக்குப் பின்னும் பேசிய ஒரு பெருங்கூட்டத்தினரின் சம்பவங்கள் ஸஹீஹான பலமான ஸனதின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சடத்துவ நோக்கில் இஸ்லாத்தை நோக்குபவர்களுக்கு இது போன்ற நிகழ்ச்சிகள் என்னவோ புராதான கட்டுக் கதைகளாகவே தோன்றும்.

இதோ வரலாற்றிலிருந்தே உங்களுக்கு ஆதாரம் காட்டுகிறோம். உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் மரணித்து போர்வையால் மூடப்பட்டிருந்த கண்ணியத்துக்குரிய ஸஹாபி ஸைத் இப்னு ஹாரிஜா (ரலி) அவர்கள் பேசியதை கூடியிருந்த ஸஹாபாக்களும், தாபியீன்களும் பார்த்தார்கள்.

இந்த சம்பவத்தை இமாம் பைஹகீ, இப்னு ஆபித் துன்யா, ஹிஷாம் இப்னு அம்மார் போன்ற இமாம்கள் ஸஹீஹான பலமான ஸனதின் மூலம் அறிவித்துள்ளதாக இமாம் இப்னு கஸீர் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஸஹாபி மரணித்ததன் பின் பேசிய வரலாற்று உண்மையை கீழ் வரும் ஹதிஸ் மற்றும் வரலாற்று நூற்களில் கண்டு கொள்ளலாம்.

நூல் : ஆசிரியர் இமாம் : பாகம்/பக்கம் :

1.அத்தாரீஹூஸ் ஸகீர் இமாம் புகாரி 1/61
2.அல் மஃரிபா யஃகூப் பஸவி 1/3010
3.அல்ஜரஹூ வத்தஃதீல் இப்னு அபீ ஹாதிம் 3/505/4834
4.அத்தபகாதுல் குப்ரா இப்னு ஸஃத் 8/364
5.அல் முஃஜமில் கபீர் தப்ரானி 5/218-219/5144-5145
6.அல் இஸ்தீஆப் இப்னு அப்தில் பர் 1/541
7.ஹில்யதுல் அவ்லியா அபூநுஅய்ம்
8.அத் தலாஇல் அபூநுஅய்ம் /511
9.தஹ்தீபுல் கமாலீ மிஸ்ஸி /2103
10.அல் முன்தழம் இப்னு ஜவ்ஸி 3/185
11.அல் பிதாயா வன்னிஹாயா இப்னு கஸீர் 6/158-159
12.அல் காஷிப் தஹபி 1/291/1748
13.உஸூதுல் காபா இப்னுல் அஸீர் 2/354/1831
14.அல் இஸாபா இப்னு ஹஜர் 2/498/2901
15.தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் 3/224/2204
16.மஜ்மஉஸ் ஸவாஇத் ஹைஸமி 5/180 – 7 /230
17.குலாஸதுல் கஸ்ரஜீ கஸ்ரஜி 1/380/2254
18.அல் காமில் பித்தாரீஹ் இப்னுஸ் அஸீர் 3/89
19.ஹயாதுஸ் ஸஹாபா யூசுப் கான்தலவி 3/843-844-45-46



இதற்கு இன்னும் பல பலமான சம்பவங்களை கூறலாம் விரிவஞ்சித் தவிர்க்கிறோம் நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும். இதே போன்ற ஒரு சம்பவத்தை ஜகரிய்யா (ரஹ்) அவர்கள் மாத்திரம் எழுதி விட்டாலோ குர்ஆனுக்கு முரண்பட்டதாகவல்லவா போய் விடுகிறது. இது எவ்வளவு பெரிய அக்கிரமம் ?

யதார்த்தம் என்னவென்றால் இந்தியா முழுவதும் மட்டுமல்ல பன்நாட்டு மக்களிடமும் "ஷைகுல் ஹதீஸ்" என்ற புகழாரம் கொண்டு பிரபல்ய மடைந்திருந்த கிட்டத்தட்ட 50 வருடங்களாக ஹதீஸ் கலைக்கு மாபெரும் தொண்டாற்றி அரிய நூற்கள் பலதையும் தந்து சென்ற மாமேதை ஜகரிய்யா(ரஹ்) அவர்களின் மீது பீ.ஜே.க்கு ஏற்பட்ட பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும் தான் அவர்களையும் அவர்களது நூற்களையும் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கக் காரணமே தவிர வேறில்லை. வஸ்ஸலாம்.

(நன்றி, வெளியீடு : மெளலானா ஸகரிய்யா (ரஹி) ஆய்வு கூடம். வெளிகாமம், இலங்கை)

வெளிச்சத்திற்கு வந்த பொய் :

அண்ணன் பி.ஜே.க்கு அண்ணன் பி.ஜே.யே விளக்கம் : மேலும் தொடர்ந்து படிப்பதற்கு முன் கீழ்க்காணும் கட்டுறையின் மேல் இரண்டு முறை ‘கிளிக்’ செய்து பெரிதாக்கிப் பார்க்கவும். இது மே-2006 ஏகத்துவம் இதழில் விவாதங்கள் ஓய்வதில்லை (தொடர்-5) என்ற தலைப்பில் எழுதப்பட்டதென்று அவர்களது இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் எந்த விஷயம் (இறந்தவர் உடலோடு எழுந்து பேசுவது) அண்ணன் பி.ஜெ. அன்ட் குரூப்பிற்கு ஏ…கத்துவோம் சிந்தனையில் அடியெடுத்து வைக்கும்பொழுது பெரிய ஆதாரமாகத் தோன்றியதும், இறந்தவர் உடலுடன் சேர்ந்து வந்தால் பிரச்சினை இல்லை என ஒப்புக்கொண்டதும், இடியென முழங்கி, மழையெனப் பொழிந்து, கும்பகோணத்து சேற்று வயலில் ஏ…கத்துவோம் விளைச்சளை கண்டதும், அப்துஸ்ஸலாம் ஹஜ்ரத் விவாதத்தில் வெற்றி பெற வைத்ததுமான இந்த பிரச்சினையில்லாத பிரச்சினை தப்லீக் ஜமாத்துடைய விஷயத்தில் மட்டும் பிரச்சினையாகிப்போனது ஏன் ?

இறந்தவர் உடலோடு எழுந்து பேசுவது என்ற விவகாரம் அப்துஸ்ஸலாம் ஹஜ்ரத் விவாதத்தில் அண்ணன் பி.ஜெ. கூறியது உண்மையென்றால், தப்லீக் ஜமாத்துடைய விஷயத்தில் கூறியது பொய். அல்லது தப்லீக் ஜமாத்துடைய விஷயத்தில் அண்ணன் பி.ஜெ. கூறியது உண்மையென்றால், அப்துஸ்ஸலாம் ஹஜ்ரத் விவாதத்தில் கூறியது பொய். எனவே எந்த பொய்யை உண்மையென அண்ணன் பி.ஜெ. பொய் சொல்லப்போகிறார் ?


இடத்திற்கு தகுந்தாற்போல் தனது நிறத்தை மாற்றி அடுத்தவர்களை ஏமாற்றும் பச்சோந்திக்கும், இடத்திற்கு தகுந்தாற்போல் தனது பேச்சை மாற்றி அடுத்தவர்களை ஏமாற்றும் பி.ஜே.க்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது நிரூபனம்.

சத்தியம் என்று வருகின்றபோது அங்கு பதில்கள் நெத்தியடியாக இருக்கவேண்டும். அசத்தியத்தின் கபாலங்கள் தெறித்தோடி மூலையைத் துளைத்து எடுக்கும் சுத்தியல் அடியாக இருக்க வேண்டும். இதைத்தான் அல்லாஹ்வும் திருக்குர்ஆனில்,
"உண்மையைப் பொய்யின் மேல் வீசுகின்றோம். அது பொய்யை நொருக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது."

(அல் குல்ஆன் : 21 :18)

அந்த பட்டையை கிளப்பும் நெத்தியடி, சுத்தியல் அடி, சரவெடி நம்மிடம் தான் இருக்கின்றது. அவர்களிடம் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. எனவே இத் தப்லீக் ஜமாத்தின் சத்தியப் பாதையில் கடுகளவும் சலனம், சஞ்சலமின்றி நடைபோடுவொம். இன்ஷா அல்லாஹ்.

"உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது" என்றும் கூறுவீராக !

(அல் குர்ஆன் : 17 :81)

"சத்தியமே வெல்லும் ; அசத்தியம் அழிந்து போகும்" என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறிக் கொண்டிருக்கிறது. அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே ! வஆகிர தாவானா வனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். வஸ்ஸலாம்.

விளக்கங்கள் ஓய்வதில்லை… !



இவன்.
முஹம்மது பதுருதீன்.

No comments: