Saturday, 2 August 2008

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.



அருள்மறையின் அற்புதங்கள்.

இம்மனிதனின் அளவை சற்று கற்பனை செய்து பாருங்கள். உலகின் அதிகமான உயரமுடைய பலமிக்க மனிதர்கள் வாழ்ந்த நாட்டின் மக்களில் ஒருவர். செளதி அரேபியாவின் தென்கிழக்கு பாலைவனப் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணப் பணி மேற்கொள்ளப்பட்ட சமயம் இம்மனித உடல் கண்டெடுக்கப்பட்டது.



இப் பாலைவனப் பகுதியை ஆளில்லா வசிப்பிடம் என்று அழைக்கப்படுகிறது. இதுவே அரபு மொழியில் " RAB-UL-KHALEE " என்று சொல்லப்படும். மேற்கண்ட மனித உடல் ARAMCO என்ற செளதி அரேபியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணப் பணி குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கண்ட உடல் அல்லாஹ் குர்ஆனில் சொன்னதை உறுதிபடுத்தும் அடையாளமாகும். ஹூது நபியின்(அலை) கூட்டத்தாராகிய ஆது சமூகத்தினர் பற்றி அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும்பொழுது, இச்சமூகத்தினர் அதிக உயரமும், அதிக பலசாலியாகவும் இருந்தனர்.

ஆது என்னும் ஜனங்களோ, பூமியில் நியாயமின்றிப் பெருமை கொண்டு, எங்களைவிட பலசாலி யாரென்று கூறினார்கள். அவர்களைப் படைத்தவன் நிச்சயமாக அவர்களைவிட பலசாலி என்பதை, அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா ? (எனினும்,) அவர்கள் நம்முடைய (இத்தகைய) அத்தாட்சிகளையும், தர்க்கித்து நிராகரித்துக் கொண்டே இருந்தார்கள்.

அல்குர்ஆன் : 41 :15

(நபியே !உயர்ந்த) ஸ்தம்பங்களைப் போன்ற 'இரம்' என்னும் ஆது ஜனங்களை உமது இறைவன் எவ்வாறு (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா ? அவர்களைப் போன்று, (பலசாலிகள் உலகத்திலுள்ள) நகரங்களில் (எங்குமே) படைக்கப்படவில்லை.

அல்குர்ஆன் : 89 : 6, 7,8

ஆனால் எப்பொழுது அல்லாஹ்வுக்கும் அவனது தூதராகிய நபி ஹூது(அலை) அவர்களுக்கும் மாறு செய்து வரம்பும் மீறினார்களோ அவர்களை அல்லாஹ் அழித்துவிட்டான்.

அன்றி, இவ்வாறே ஆது ; ஸமூது கூட்டத்தினரையும் (அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக) நாம் அழித்துவிட்டோம். (நீங்கள் போக வர உள்ள வழியில்) அவர்கள் இருந்த இடங்கள் உங்களுக்கு நன்றாகவே தென்படுகின்றன.

அல்குர்ஆன் 29 : 38

ஆத் என்னும் ஜனங்களோ, அதி வேகமாக விரைந்து (இரைந்து) செல்லும் (புயல்) காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர்.

அல்குர்ஆன் 69 : 6

செளதி அரேபியா உலமாக்களின் அபிப்பிராயப் படி இம்மனித உடல் ஆது சமூகத்தாரை சேர்ந்தது என்று கருதுகின்றனர். இப்பகுதியை செளதி இரானுவம் தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. வெளியிலிருந்து யாரும் இப்பகுதிக்கு உள்செல்ல அனுமதியில்லை, ARAMCO நிறுவனத்தின் முக்கியஸ்தர்களைத் தவிர.

செளதி அரசு இப்பகுதியை மிகவும் இரகசியமாக பாதுகாத்து வருகிறது. இருப்பினும் இரானுவ ஹெலிகாப்டரிலிருந்து சில இரானுவத்தினர் இப்புகைப் படத்தை மேலிருந்து எடுத்துள்ளனர்.

இப்புகைப்படத்தின் மூலம் நாம் அடையும் நன்மைகள் ஏராளம். அல்லாஹ்வும் ரசூலும் கூறியவைகள் எந்தளவு நூற்றுக்கு நூறு உண்மையானது சத்தியமானது என்பதை பறைசாற்றும் ஆதாரங்கள்தான் இவை போன்றவைகள். ஒரு உண்மை முஸ்லிம் கண் பார்வையை கொண்டு ஈமான் கொள்வது கிடையாது. ஈமானின் பார்வையை கொண்டுதான் அவன் ஈமான் கொள்வான். அவ்வாறு அவன் ஈமானின் பார்வையை கொண்டு ஈமான் கொண்ட விஷயங்களை அல்லாஹ் அவனது கண் பார்வைக்கும் காட்டுவானேயானால் அது அவனுடைய ஈமானில் அபிவிருத்தியையும் இறைநேசத்தையும் ஏற்படுத்தும்.

மாறாக இப்படிப்பட்ட அத்தாட்சிகள் வெறுமனே கண்காட்சி பொருளாகவும், பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என்ற கோணத்தில் பார்ப்போமேயானால் உண்மையிலேயே நஷ்டம் நமக்குத்தான். இதைத்தான் கண் இருந்தும் குருடர் என்பர்.

அருள்மறையின் அற்புதங்கள் தொடரும்…




இவன்.
முஹம்மது பதுருதீன்.

1 விமர்சனங்கள்.:

Ansari - London said...

Allahu Akbar! Subhanallah!