Monday 18 February 2008

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

சுபுஹான மெளலிதில் தவறில்லை !பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான (TNTJ) அணி பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது !களியக்காவிளை விவாதத்தின்போது !


அன்பிற்குரிய இஸ்லாமியர்களே !
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தைச்சார்ந்த அதன் தலைவர் பி.ஜைனுலாபிதீன் தலைமையில் ஒரு அணியும் சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த மெளலவி எம்.ஷைக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின் தலைமையில் ஒரு அணியும் கடந்த ஆண்டு களியக்காவிளையில் மக்கள் மத்தியில் நான்கு தலைப்புகளில் விவாதம் செய்ததை அனைவரும் அறிவர்.

அதில் பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான (TNTJ) அணி எந்த அளவுக்கு அநாகரிகமாக நடந்து கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு ஆரம்ப முதலே நடந்து கொண்டனர் என்பதையும் அனைவரும் அறிவர். அதை அறியாதவர்கள் இரு தரப்பினரிடமும் உள்ள அந்த CDயை பெற்று பார்த்துக்கொள்ளலாம்.

முதலில் மெளலிது பற்றிய விவாதம் நடைபெற்றது. சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த மெளலவி எம்.ஷைக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின் தலைமையிலான அணி விவாதத்தை தொடங்கியது.

பி.ஜைனுலாபிதீன் அவர்களால் எழுதப்பட்ட சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு மற்றும் இஸ்லாம் அடிப்படைக்கல்வி என்ற நூற்களை அடிப்படையாக வைத்து, அந்த புத்தகங்களிலிருந்து சில கருத்துக்களை சொல்லி, சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு என்ற புத்தகத்தை கையில்வைத்துக்கொண்டு இப்போது உள்ள மெளலிதில் என்ன தவறு இருக்கிறது ? என்று ஒரு கேள்வியை முதலில் வைத்தது. ஒப்பந்தப்படி இதற்கு பதில் சொல்லும் விதமாக இன்னென்ன தவறு சுபுஹான மெளலிதில் இருக்கிறது என்று பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான (TNTJ) அணி சொல்லி, பிறகு சாகுல் ஹமிது மெளலிதில் உள்ள பெரிய பொண்ணு சிறிய பொண்ணு சம்பந்தமான கேள்வியை கேட்டிருக்க வேண்டும். ஏன் என்றால் சுன்னத் ஜமாஅத் அறிஞர் மெளலிதில் என்ன தவறு இருக்கிறது ? என்று கேள்வி கேட்கும்போது கையில் எடுத்து காட்டிய புத்தகம் "சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு" எனவே அதிலிருந்து கருத்துக்களை எடுத்துவைத்திருக்க வேண்டும். அதை விடுத்து விட்டு, பி.ஜைனுலாபிதீன் எழுதிய புக்கிற்கு தனியாக விவாதம் வைப்போம், நாங்கள் என்ன கேள்வி கேட்கிறோமோ அதற்கு பதில் சொல்லுங்கள் என்று தன் அணிக்கே உரித்தான அகங்காரத்தோடு பதில் சொன்னது தவ்ஹீது ஜமாஅத் அணி.

விவாதம் நடைபெறும் இடத்தில் இரு அணியினரும் கேள்வி கேட்கவும், பதில் சொல்லவும் கடமைபட்டவர்கள் என்ற சிறிய அறிவுகூட TNTJ அணியினருக்கு இல்லாததுதான் இந்த அகங்காரத்திற்கு காரணம்.

முதலில் அவர்கள் கேள்வி கேட்டு, பதில் சொல்லும் நிலையில் நாம் இருப்பதா ? இது நம்முடைய கவுரவத்திற்கு ஏற்பட்ட இழுக்கல்லவா ? என்று பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான அணி கருதியிருந்தால், டாஸ் வென்ற அணி பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான தவ்ஹீது ஜமாஅத் அணிதானே, விவாதத்தை தொடங்கியிருக்க வேண்டியதுதானே, சுன்னத் ஜமாஅத் அணியினரைப்பார்த்து விவாதத்தைத்தொடங்குங்கள் என்று ஏன் வேண்டுகோள்விடுக்க வேண்டும் ?

பி.ஜைனுலாபிதீன் அவர்கள் எழுதிய புத்தகங்கள் அனைத்தையும் வைத்து கேள்வி கேட்டிருந்தால், பி.ஜைனுலாபிதீன் புத்தகங்களுக்கு தனியாக விவாதம் வைப்போம் என்று சொல்வதில் நியாயம் உண்டு. விவாதத்தில் தலைப்புக்குட்பட்ட புத்தகம் "சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு" பி.ஜைனுலாபிதீன் எழுதிய இந்த புத்தகத்தில்தானே இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் மெளலிதில் உண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது. மற்றும் எந்த செயலுக்குமே அடிப்படை கல்வி வேண்டும் அந்த அடிப்படையில் எடுத்த புத்தகம் "இஸ்லாம் அடிப்படைக்கல்வி" இதுவும் பி.ஜைனுலாபிதீன் என்பவரால் எழுதப்பட்டது. இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கையை வைத்துத்தானே செயல்பட முடியும்.

தவ்ஹீத் ஜமாஅத் அணியினருக்கு இந்த கேள்வி தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது போலும். கடைசிவரை இதற்கு பதில் சொல்லவில்லை. தவ்ஹீது ஜமாஅத் அணியினருக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி, கோபம் பீறிட்டு முகமெல்லாம் வெளிறிப்போய்விட்டதை அவர்கள் வெளியிட்ட CD யில் தெளிவாக பார்க்க முடிந்தது. சுன்னத் ஜமாஅத் தன் விவாதத்தை சுபுஹான மெளலிதில் தொடங்கியது இதை கண்டுகொள்ளாத தவ்ஹீது ஜமாஅத் சாகுல் ஹமீது மெளலிதில் கேள்வியை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறது. கடைசி வரை சுபுஹான மெளலிதை தவ்ஹீது ஜமாஅத் தொடவும் இல்லை, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவும் இல்லை. இந்த விவாதத்தில் தவ்ஹீது ஜமாஅத்தின் வாய்சவாடல் நன்றாக வெளிப்பட்டது.

தமிழகத்தில் எல்லா இடங்களிலும் ஓதப்படும் சுபுஹான மெளலிதை விவாதத்தில் துணிந்து எடுத்து வைத்த சுன்னத் ஜமாஅத்தினருக்கு பதில் சொல்ல முடியாத தவ்ஹீது ஜமாஅத், கிணற்றுக்குள் வாழும் தவளையைப்போல ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஓதப்படும் சாகுல் ஹமீது மெளலிதில் உள்ள கருத்தை எடுத்து வைத்து தோல்வியை சந்தித்தது.

ஆனால் அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்தான் இல்லாமல் விவாதத்தில் உளறி, தவ்ஹீது ஜமாஅத் அறிஞர்களுக்கு "அரபி மொழி தெரியாது" என்று அணியின் தலைவரான பி.ஜெய்னுலாபிதீனே "சுன்னத் ஜமாஅத்" அறிஞர்களிடம் அன்றைய தினம் நடைப்பெற்ற இரண்டாவது தலைப்பில் நடந்த விவாதத்தில் வாக்குமூலம் கொடுத்தார். சுன்னத் ஜமாஅத் அணி முன்னிலையில், தன் அணியான தவ்ஹீத் ஜமாஅத் அணியினரை கேவலப்படுத்த இதைவிட வேறு வார்த்தை அணியின் தலைவரான பி.ஜைனுலாபிதீனுக்கு கிடைக்கப்போவது இல்லை. அந்த அவலத்தையும் CD யில் பார்க்கமுடிகிறது. ஒரு வேலை இது பி.ஜெய்னுலாபிதீன் அவர்களால் ஆய்வு செய்து, அறிவுப்பூர்வமாக முடிவு செய்து உண்மையை ஒத்துக்கொண்டுவிடுவோம் என்று நினைத்துக்கூட வாக்குமூலம் கொடுத்திருக்கலாம்.

15 அல்லது 20 வருடங்களாக சுபுஹான மெளலிதில் தவறு இருக்கிறது, அதை ஓதுவது "ஷிர்க்" என்றெல்லாம் மேடைதோறும் முழங்கி வந்த தவ்ஹீது ஜமாஅத், அதை கிண்டலடித்து பிழைப்பு நடத்திய தவ்ஹீது ஜமாஅத், இதனை குர்ஆன் மற்றும் ஹதிஸ்கள் மூலம் எதிர்க்க முடியாமல் அப்துல் ரஹ்மான் பிர்தெளஸி(தவ்ஹீது ஜமாஅத்தின் காமெடி நடிகர்) என்ற சினிமா பைத்தியம் பிடித்தவரைக்கொண்டு சுபுஹான மெளலிதுக்கு சினிமா பாட்டு ராகம் அமைத்துக்கொடுத்து தவ்ஹீது மேடைகளிலே பாட வைத்த தவ்ஹீது ஜமாஅத் மெளலிது பற்றிய விவாதத்தில் சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் சுபுஹான மெளலிதை நினைவுபடுத்தியும்கூட தவ்ஹீது ஜமாஅத்தால், விவாதத்தில் பங்கேற்ற சுன்னத் ஜமாஅத் அறிஞர்களிடம் சுபுஹான மெளலிதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்ட பயந்தது ஏன் ? "ஷிர்க்" என்ற பெருங்குற்றத்தை சுபுஹான மெளலிது மீது சுமத்திய தவ்ஹீது ஜமாஅத், விவாதத்தில் பங்கேற்ற சுன்னத் ஜமாஅத் அறிஞர்களிடம் சுட்டிக்காட்ட பயந்து கேவலப்பட்டு போனது ஏன் ?

மார்க்க அறிவு இல்லாத மாட்டு மந்தை கூட்டம் போல கூடியிருக்கும் கூட்டங்களில் சுபுஹான மெளலிதைப்பற்றி பேசி, இதெல்லாம் "ஷிர்க்" அல்லவா ? இது கூடுமா ? இது மார்க்கத்தில் உண்டா ? என்றெல்லாம் அறியாதவர்கள் மத்தியில் வீர வசனம் பேசிய தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜெய்னுலாபிதீன், சுபுஹான மெளலிதை ஆய்வு செய்து "சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு" என்று புத்தகமே வெளியிட்ட பி.ஜெய்னுலாபிதீன், விவாதத்தில் பங்கேற்ற சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் முன்னிலையிலே, மெளலிதில் என்ன தவறு இருக்கிறது ? நேரடியாக விவாதத்தில் கேட்ட சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் மத்தியிலே, இரு தரப்பைச்சேர்ந்த மக்கள் முன்னிலையிலே, நடைப்பெற்ற விவாதத்தில் பங்கேற்ற தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜெய்னுலாபிதீன், மெளலிது பற்றிய விவாதத்தில் ஒரு வார்த்தைக்கூட மெளலிதைப்பற்றி எடுத்து வைக்காமல் பயந்து நடுங்கி, ஒடுங்கியிருந்தது ஏன் ? தவ்ஹீது ஜமாஅத் அணியின் சார்பாக தம்மோடு விவாதத்தில் பங்கேற்ற அரபி தெரியாதவர்களுக்கு துண்டுச்சீட்டு எழுதிக்கொடுத்து, அவர்களால் பேசமுடியாமல் திணறி, கோபப்படுவதைப்பார்த்து ரசித்துக்கொண்டிருந்தது ஏன் ? மெளலிது பற்றிய விவாதத்தில் பேச முடியாமல் தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜெய்னுலாபிதீன் நாக்குக்கு பூட்டு போட்டவன் யார் ? மெளலிது பற்றிய விவாதத்தில் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் பயந்தது ஏன் ? முகமூடி கிழிந்து விடும் என்றா ? இல்லை பின்னங்கால் பிடறியில் பட ஓட வேண்டிய நிலை ஏற்படும் என்றா ? பேச வேண்டிய நேரத்தில், பேச வேண்டிய இடத்தில் பேச பயந்தது ஏன் ? மற்ற இடங்களில் வாய் கிழிய பேசி என்ன பிரயோஜனம் ? பி.ஜைனுலாபிதீன் மெளலிது பற்றிய விவாதத்தில் ஏன் பேச பயந்தார் என்று எந்த தவ்ஹீது ஜமாஅத்தினராவது அவரிடம் கேள்வி கேட்டார்களா ? தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜைனுலாபிதீனிடம் கேள்வி கேட்கும் துணிவுதான் தவ்ஹீது ஜமாஅத்தினருக்கு உண்டா ?

விவாதத்தில் பேசாமல் மெளனம் சாதித்ததின் மூலம் "சுபுஹான மெளலிதில் தவறில்லை" என்று தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜைனுலாபிதீன் அவர்கள் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதற்கான அர்த்தமாகத்தான் கொள்ள முடியும். இதை விடுத்து பதில் சொல்லும் விதமாக சப்பைக்காரணங்களைக் கொடுத்தால் சுன்னத் ஜமாஅத்தினரின் பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் மோசமான நிலைமை தவ்ஹீது ஜமாஅத்தினருக்கு ஏற்படும்.

வஸ்ஸலாம்.

சகதுல்லாஹ்
துபை.

No comments: