Tuesday 19 February 2008

வெளிச்சத்திற்கு வந்த உண்மை

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

வெளிச்சத்திற்கு வந்த உண்மை !

வியாழன், அக்டோபர் 25, 2007 அன்று விடாது கருப்பு இணையத்தில் சுபுஹான மெளலிதில் தவறில்லை ! பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான (ததஜ) அணி பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது ! களியக்காவிளை விவாதத்தின்போது ! என்ற ஒரு கட்டுரையை பதிப்பித்தேன் (பார்க்க இங்கு கிளிக் செய்யவும்) அதற்கு பல சகோதரர்கள் கருத்தும் பதிவு செய்திருக்கிறார்கள். சகோதரர் கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி என்பவருக்கும் மெயில் அனுப்பியிருந்தேன். அதற்கு கா.அ. பஸ்லுல் இலாஹி எனக்கு பல ஸலாம்கள் சொல்லி பதில் மெயில் அனுப்பி, அதை அவருடைய பிளாக்கிலும் பதிவு செய்திருக்கிறார். என்னுடைய கட்டுரையை பதிவு செய்தால் உண்மை விளங்கிவிடும் என்று அஞ்சி அவருடைய பதிலை மட்டும் பதிவு செய்திருக்கிறார் (பார்க்க இங்கு கிளிக் செய்யவும்). ஆனால் நான் திரும்ப மெயில் அனுப்பவில்லை.

பஸ்லுல் இலாஹி எனக்கு அனுப்பிய மெயிலிலிருந்து சில வரிகள் :−

(ரகசிய கூலி பதில் சொல்லவில்லை என்பதனால் மவ்லிது ஓதுவது மார்க்கமாக ஆகி விடாது. இது மாதிரிதான் சேக் அப்துல்லா ஜமாலியிடம் பி.ஜெ. ரகசிய கூலி வாங்கி இருப்பார். அதனால்தான் வாங்கிய ரகசிய காசுக்காக வாய் மூடி இருந்திருப்பார். எங்களிடம் ரகசியமாக சம்பளம் பேசி தவ்ஹீது பிரச்சார வேலைக்கு வந்த வேலைக்காரர்தான் பி.ஜெ. (கா.அ.பஸ்லுல் இலாஹியின் முழு வாக்குமூலம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்) எனவே ரகசிய கூலி பி.ஜெ. பதில் சொல்லவில்லை என்பதைப் பற்றி ஆச்சரியப்படவில்லை. ரகசிய கூலி பதில் சொல்லவில்லை என்பதனால் மவ்லிது ஓதுவது மார்ர்கமாக ஆகி விடாது.) இதுபோல அனுப்பியிருந்தார்.

அவர்கள் எனக்கு சொன்ன அனைத்து ஸலாம்களுக்கும் பதில் சொல்லிக்கொண்டேன்.

33 தடவை திரும்பத் திரும்ப ஸலாம் சொல்லப்படுகிறது. எனவே இது முதல் தவறு என்று பஸ்லுல் இலாஹி சொல்ல வருகிறார். புரிந்துதான் சொன்னாரா என்பது எனக்கு தெரியவில்லை.ஆனால், யார் ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்வார்களோ அவர்கள் மீது 10 முறை அல்லாஹ் ஸலவாத்து சொல்வதாக வருகிறது.

அப்படியானால், அஸ்தஃபிருல்லாஹ், அல்லாஹ் பைத்தியக்காரனா ? இந்த ஸலாம் பைத்தில் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு 33 தடவை திரும்பத் திரும்ப ஸலாம் சொல்லப்படுகிறது. எனவே இது முதல் தவறு என்று பஸ்லுல் இலாஹி சொல்ல வருகிறாரே.

அப்படியானால், அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவை சொல்கிறோம் எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே என்று 1 தடவை சொன்னால் போதாது ! அதில் என்ன சந்தேகம் நமக்கு வந்தது ! திரும்ப திரும்ப ஏன் சொல்ல வேண்டும். அது போல அல்லாஹூ அக்பர், சுபுஹானல்லாஹ் இன்னும் இது போல உள்ள வாசகங்களை திரும்ப திரும்ப ஏன் சொல்ல வேண்டும் ? இதையெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்றா சொல்ல முடியும் ? லாயிலாஹா இல்லல்லாஹூ என்று சொன்னால் மட்டும் போதாது, (இதை சொல்லித்தந்தவரையும் ஏற்கிறேன் என்று) முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் என்பதையும் சேர்த்து சொல்வதுதான் கலிமத்து தவ்ஹீதாகும். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எத்தனை தடவை ஸலாம் சொல்கிறோமோ அவைகளெல்லாம் நமக்கு 10 மடங்காக அல்லாஹ்வால் சொல்லப்படுகிறது என்பதை அறிய வேண்டும். இப்போது நம்முடைய செய்தி இதுவல்ல.

இந்த மெயிலில் வெளிச்சத்திற்கு வந்த உண்மைதான் இப்போது ஆராயவேண்டியவை.


எங்களிடம் ரகசியமாக சம்பளம் பேசி தவ்ஹீது பிரச்சார வேலைக்கு வந்த வேலைக்காரர்தான் பி.ஜெ. (முழு வாக்குமூலம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்) எனவே ரகசிய கூலி பி.ஜெ. பதில் சொல்லவில்லை என்பதைப் பற்றி ஆச்சரியப்படவில்லை என்று பஸ்லுல் இலாஹி சொல்கிறார்.

ஜாக் ஜமாஅத்தும் தவ்ஹீது ஜமாஅத்தும் பித்தலாட்டம், நயவஞ்சகம், போக்கிரித்தனம் மற்றும் பொருக்கித்தனம் மிகுந்த ஜமாஅத் என்பதை அவருடைய மெயிலைப்பார்த்த பின்புதான் தெரிந்துகொண்டேன். ஜாக் ஜமாஅத்தில் பி.ஜெ. இருக்கும்போதுதான் சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் சம்பளம் பேசுகிறார்கள், இஸ்லாமியப்பணி செய்வதற்கு காசு வாங்குகிறார்கள் என்று கூட்டாக பிரச்சாரம் செய்த இந்த கூட்டம், அதைக்கொண்டு யோக்கியவான்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட இந்த கூட்டத்தின் மோசடித்தனம் என்ன தெரியுமா ? சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் சம்பளம் பேசுகிறார்கள் என்று வீர வசனம் பேசிய இந்த கபோதிகளின் அயோக்கியத்தனம் என்ன தெரியுமா ? இஸ்லாமியப்பணி செய்வதற்கு காசு வாங்குகிறார்கள் என்று கூட்டாக பிரச்சாரம் செய்த இந்த கூட்டத்தின் பின்பக்க செயல், பொம்பலைத்தனம் என்னவென்று தெரியுமா ?

ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தும் சம்பளம் பேசி இஸ்லாமியப்பணி செய்வதுதான். பைசா இல்லையென்றால் இஸ்லாமியப்பணி கிடையாது. எதையும் நேரடியாக பெறமாட்டார்கள். பின்பக்கமாகத்தான். மார்க்கப்பணி செய்வதற்கு காசு வாங்கலாமா ? கூலி பேசலாமா ? என்று ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தினர் மேடைகளிலே வீரத்தோடு பயான் செய்வார்கள், மற்றவர்கள் மீது குறைகளை அள்ளிவீசுவார்கள் ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த தறுதலைவாதிகள் அனைவரும் அடிமைப்போல வாய் பிளந்து கேட்பார்கள். இதையெல்லாம் பேச இவர்களுக்கு ஏது பணம், இவர்களின் குடும்பம் எப்படி நடக்கிறது சிந்திக்க மாட்டார்கள். பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும் இல்லையென்றால் மிருகத்திற்கும் மனிதனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

சரி விஷயத்திற்கு வருவோம்.


ஜாக் ஜமாஅத்தில் அந்நஜாத் பத்திரிக்கையில் பணி புரிய பி.ஜைனுலாபிதீன் சம்பளம் பேசி பணிபுரிந்தார் என்று ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த பஸ்லுல் இலாஹி சொல்கிறார். என்னங்கடா இது… ? ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தும் கூலி பெற்று இஸ்லாமியப்பணி செய்வது மார்க்கமா ? மற்றவர்கள் செய்வதுதான் தவறா ? திருடாதே என்று சொல்லும் தகுதி திருடனுக்கு கிடையாது. இது தவறு என்று ஜாக்கில் பி.ஜைனுலாபிதீன் இருக்கும்போது பஸ்லுல் இலாஹிக்கு தெரியவில்லையா ? இல்லை இஸ்லாமியப்பணி செய்வதற்கு கூலி கொடுக்கும் உயர்ந்த நிலையில் இருப்பதாக நினைத்துக்கொண்டாரா ?

சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் பற்றி பேச, கூலி பெற்று இஸ்லாமியப்பணி செய்த ததஜவைச்சார்ந்த பி.ஜைனுலாபிதீனுக்கும், கூலி கொடுத்த ஜாக் ஜமாஅத்திற்கும் என்ன தகுதி இருக்கிறது ? மற்றவர்களை இப்படி பேசி பிழைப்பு நடத்துவதைவிட ததஜ அறிஞர்களும் ஜாக் ஜமாஅத் அறிஞர்களும் திருவோட்டை கையில் எடுத்து பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தியிருந்தால் அது எவ்வளவோ மேலானதாக இருந்திருக்கும். இஸ்லாமியப்பணிக்கு கூலி கொடுத்தது தவறா ? இல்லை கூலியைப்பெற்றது தவறா ? ததஜ மற்றும் ஜாக் ஜமாஅத்தைச்சேர்ந்த தறுதலைவாதிகள் இதற்கு பதில் சொல்லட்டும். இல்லையென்றால் அறியாமையில் மூழ்கியிருந்த முட்டாள்களின் வாரிசு என்று சொல்லிக்கொள்ளட்டும். இனிமேலாவது சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் பற்றி பேசும் முன்பு ததஜ அறிஞர்கள் பற்றியும் ஜாக் ஜமாஅத் அறிஞர்கள் பற்றியும் அவர்களின் யோக்கியத்தைப்பற்றியும் தறுதலைவாதிகள் அறிய முற்படவேண்டும். சுன்னத் ஜமாஅத் அறிஞர்களிடம் ததஜ அறிஞர்களும் ஜாக் ஜமாஅத் அறிஞர்களும் உண்மை முஸ்லிமாக இருப்பார்களானால் மன்னிப்பு கேட்பார்கள்.

வஸ்ஸலாம்.

சகதுல்லாஹ்
துபை.

4 comments:

Anonymous said...

ஆரம்பத்தில் பி.ஜெ.க்கு ஜே போட்ட ஜாக் இப்போது சீ.. போடுகிறது. நாளையே மீண்டும் பி.ஜெ. ஜாக்கில் சேர்ந்தால் மீண்டும் ஜே போடுவார்கள்.
இது இவர்களின் தொட்டில் பழக்கம் அது சுடுகாடு மட்டும். இவர்கள் 4 மாபெரும் இமாம்களையும் குறை கூற தகுதியற்றவர்கள்.

Anonymous said...

தவ்ஹிது ஜமாஅத் தலைவர் பீ.ஜே வுக்கு கூலி கொடுத்த ஜமாஅத் ஜாக் ஜமாஅத்தாகும். அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?

சொந்தப்பணம் அல்லது தந்தை, பாட்டன் பூட்டன் முப்பாட்டன் தேடி வைத்த சொத்தையா விற்றுக்கொடுத்தார்கள்?

அறியாமையில் மூழ்கியிருந்தவர்கள் (முன்னோர்கள் அறிவீனர்கள்) எப்படி நேர்மையாக சம்பாதித்து இருக்க முடியும்?

அதாவது தவ்ஹிது ஜமாஅத்வாதிகளின் (நாம் சொல்லவில்லை அவர்களின் முன்னோர்களுக்கு தவ்ஹிது ஜமாஅத்வாதிகள் கொடுத்த சான்றிதழ்கள்) தந்தை, பாட்டன் பூட்டன் முப்பாட்டன்களெல்லாம் மாங்கா மடையன்கள், முட்டாள்கள், காட்டுக்கபோதிகள், எருமை மாடுகள், மூர்க்கர்கள் மற்றும் அறிவில்லாத முண்டங்கள் எப்படி நேர்மையாக சம்பாதித்து இருக்க முடியும்?

ஜாக் ஜமாஅத் யாரிடம் பிச்சை எடுத்து தவ்ஹிது ஜமாஅத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீனுக்கு கூலி கொடுத்தார்கள்?

தவ்ஹிது ஜமாஅத்வாதிகளின் (நாம் சொல்லவில்லை அவர்களின் முன்னோர்களுக்கு தவ்ஹிது ஜமாஅத்வாதிகள் கொடுத்த சான்றிதழ்கள்) தந்தை, பாட்டன் பூட்டன் முப்பாட்டன்களெல்லாம் மாங்கா மடையன்கள், முட்டாள்கள், காட்டுக்கபோதிகள், எருமை மாடுகள், மூர்க்கர்கள் மற்றும் அறிவில்லாத முண்டங்கள் நேர்மையாக சம்பாதித்து இருக்க வாய்ப்பு இல்லை என்பது தெரிந்து விட்டது.

எப்படி அவர்கள் தேடி வைத்த சொத்தை பயன்படுத்துகிறார்கள்? எப்படி அந்த சொத்துக்களை வைத்து சோறு சாப்பிடுகிறார்கள்? எப்படி அந்த சொத்தின் மூலம் வரும் வருமானத்தை வைத்து பிள்ளைக்குட்டிகளை வளர்க்கிறார்கள்? எப்படி அந்த சொத்தின் மூலம் வரும் வருமானத்தை வைத்து தன் மனைவிக்கு பூ வைக்கிறார்கள்? உறுத்தவில்லையா?

தந்தை, பாட்டன் பூட்டன் முப்பாட்டன்களையெல்லாம் சகட்டுமேனிக்கு திட்டியவர்களே! அவர்களின் சொத்துமட்டும் இனிக்குதா? இந்த சொத்து நேர்மையானதா என்று சிந்திக்க வேண்டாமா?

உங்களின் தந்தை, பாட்டன் பூட்டன் முப்பாட்டன்களையெல்லாம் யாராவது திட்டினால் சீற்றம் கொண்டு எழ வேண்டிய நீங்களே உங்களின் தந்தை, பாட்டன் பூட்டன் முப்பாட்டன்களையெல்லாம் இப்படி கேவலப்படுத்திவிட்டீர்களே? நல்ல தவ்ஹிது கொள்கையில் இருக்கிறீர்கள். இதுதான் உங்கள் தவ்ஹிதா?

Unknown said...

களியக்காவிளை விவாதம் தொடர்பாக பி.ஜைனுல் ஆபிதீன் சொன்னாராம் ஜாக் ஜமாஅத்தார்கள் நம்முடைய கொள்கைக்கு ஒத்தவர்கள் என்றாராம். ஜாக் ஜமாஅத்தின் நிலை என்னவென்று தெரிந்து விடுவது என்று முடிவு செய்தார்களாம் பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹிது ஜமாஅத்தார்கள்.

அதன்படி
தவ்ஹிது ஜமாஅத்தைச்சேர்ந்த கோவை ரஹ்மத்துல்லாஹ் என்பவர் (இவரும் பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹிது ஜமாஅத் அணி சார்பாக களியக்காவிளை விவாதத்தில் கலந்துகொண்டவர்) சுன்னத் ஜமாஅத்காரரைப்போல தொலைபேசியில் ஜாக் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.கமாலுதீன் மதனியை தொடர்புகொண்டு பேசினாராம். நாங்கள் தமிழ்நாடு தவ்ஹிது ஜமாஅத்தோடு களியக்காவிளையில் விவாதம் செய்ய இருக்கிறோம் ஆதாரங்கள் இருந்தால் கொடுங்கள் என்று கேட்க, அதற்கு ஜாக் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.கமாலுதீன் மதனி பாக்கியாத்தில் கேளுங்கள் என்று சொல்ல, அதற்கு சுன்னத் ஜமாஅத் வேடமிட்டிருக்கும் கோவை ரஹ்மத்துல்லாஹ் என்பவர் அங்கு கேட்டுவிட்டோம் அங்கு இல்லை என்று சொல்ல, அதற்கு ஜாக் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.கமாலுதீன் மதனி ஜமாலியாவில் கேளுங்கள் என்று சொல்ல, அதற்கு சுன்னத் ஜமாஅத் வேடமிட்டிருக்கும் கோவை ரஹ்மத்துல்லாஹ் என்பவர் அங்கும் கேட்டுவிட்டோம் அங்கும் இல்லை என்று சொன்னாராம். இப்படி தொலைபேசியில் பேசிக்கொண்டார்களாம்.

இது சம்பந்தமாக பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹிது ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ ஏடான 'ஏகத்துவம்' மாத இதழை பாருங்கள்.

எந்த மாதம் என்று கேட்கிறீர்களா?

2007 ம் வருடம் மே மாத ஏகத்துவம் மாத இதழைப்பாருங்கள். விளக்கமாக இருக்கும்

இது மிகப்பெரிய மோசடி.

தவ்ஹிது ஜமாஅத்தைச்சேர்ந்த கோவை ரஹ்மத்துல்லாஹ் என்பவர் (இவரும் பி.ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான தமிழ்நாடு தவ்ஹிது ஜமாஅத் அணி சார்பாக களியக்காவிளை விவாதத்தில் கலந்துகொண்டவர்) தவ்ஹிது ஜமாஅத்காரரைப்போல தன் அடையாளத்தோடு தொலைபேசியில் ஜாக் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.கமாலுதீன் மதனியை தொடர்புகொண்டு பேசியிருக்க வேண்டும். அப்படி பேசியிருந்தால் தவ்ஹிது ஜமாஅத்தைச்சேர்ந்த கோவை ரஹ்மத்துல்லாஹ் என்பவரை உண்மைத் தவ்ஹிதுவாதி உண்மை முஸலிம் என்று சொல்லலாம். இதுபோல என்னவெல்லாம், எப்படியெல்லாம் மற்றும் யாரையெல்லாம் மோசடி செய்து கொண்டிருக்கிறார்களோ? அல்லாஹ்வுக்குத்தான் தெரியும். தமிழ்நாடு தவ்ஹிது ஜமாஅத்தைச்சேர்ந்த கோவை ரஹ்மத்துல்லாஹ் என்பவரின் மகப்பெரிய பொறுக்கித்தனம், இது தமிழ்நாடு தவ்ஹிது ஜமாஅத்தைச்சேர்ந்த கோவை ரஹ்மத்துல்லாஹ் என்பவரின் கீழ்தரமான பொம்பலைத்தனம். இவர்களெல்லாம் இஸ்லாமியப்பிரச்சாரம் செய்ய வந்துவிட்டார்கள். அறிவு மழுங்கடிக்கப்பட்ட தமிழ்நாடு தவ்ஹிது ஜமாஅத்தைச்சேர்ந்த தொண்டர்கள் (தமிழ்நாடு தவ்ஹிது ஜமாஅத்தைச்சேர்ந்த தறுதலைவாதிகள்) இவர்கள் சொல்வதுதான் மார்க்கம், இதுதான் தவ்ஹிது என்று நம்புகிறார்கள். மாங்கா மடையன்கள் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் என்ன வேண்டும்.

Anonymous said...

ஊதியத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். P.J.
அந்நஜாத் பத்திரிக்கையிலிருந்து ராஜினாமா செய்த பி.ஜே. உண்மைக் காரணத்தை மக்களுக்கு கூறாமல் பொய்யான காரணத்தைக் கூறும்படி அவர் கைப்பட எழுதிய கடிதம் http://mdfazlulilahi.blogspot.com/1990/01/blog-post.html என்ற பிளாக்கில் உள்ளது. அந்நஜாத் துவங்குவதற்கு முன்பே பிரச்சனை வந்து விட்டது. அதற்குரிய ஆதாரம்தான் பி.ஜே. 17-01-1986 இல் துபைக்கு எழுதிய கீழ் காணும் கடிதம். இதைப் படித்தால் அந்நஜாத்திலிருந்து ராஜினாமா செய்த பின், ''பத்திரிக்கையை மோசடி செய்து விட்டார் அதனால்தான் விலகினேன். நில மோசடி செய்து விட்டார் அதனால்தான் விலகினேன்'' என்று பி.ஜே. சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறெல்லாம் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என்பதை விளங்கலாம். துபையிலிருந்த பொதக்குடி குத்புத்தீன் அவர்களுக்கு 17-01-1986 அன்று P. ஜைனுல் ஆபிதீன் எழுதிய கடிதம்.17-1-86பேரன்புச் சகோதரர் குத்புத்தீன் அவர்களுக்கு P. ஜைனுல் ஆபிதீனுடைய அஸ்ஸலாமு அலைக்கும். நலம், நலம் பல சூழ்க!
கோவையில் நடந்த ISM மாநாட்டில் நானும் சகோதரர் ஷhஹுல் ஹமீது (அபூஅப்துல்லாஹ்) அவர்களும் கலந்து கொண்டோம். நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது. பத்திரிக்கை சம்பந்தமாக நீங்கள் எழுதிய மடலை என்னிடம் சகோதரர் ஷhஹுல் ஹமீது (அபூஅப்துல்லாஹ்) அவர்கள் காட்டினார். அது பற்றி நீண்ட நேரம் ஆலோசனை செய்தோம்.
நிர்வாகப் பொறுப்புக்களை ஷhஹுல் ஹமீது (அபூஅப்துல்லாஹ்) அவர்களிடம் வழங்கியதை வரவேற்கிறேன். அந்த துறையில் அவர்களின் அனுபவம் அதிகம். அந்த அடிப்படையில், அவரது பொறுப்புக்கள் கீழ்கண்ட விதமாக அமைய வேண்டும் என்ற நான் கருதுகிறேன். சந்தாக்கள் சேர்ப்பது, விலை நிர்ணயம் செய்வது, வினியோகம் செய்வது, அச்சிடும் பொறுப்பு போன்ற காரியங்கள் அவரிடமே இருக்க வேண்டும்.
எனது பொறுப்புக்கள் பின் வருமாறு இருக்க வேண்டும். இதை நாம் தெளிவாகப் பேசிக் கொண்டால் தான் நாளை பிரச்சனைகள் தோன்றாது.
கட்டுரை, கேள்வி, பதில் போன்ற எல்லா எழுத்தோவியங்களும் என் பொறுப்பிலேயே இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தை பிரசுரிப்பது என்றாலும் எனது ஆலோசனைக்கு பின்பே பிரசுரிக்க வேண்டும். யாருடைய கட்டுரையை பிரசுரிப்பது என்றாலும், அது எனது பார்வைக்கு அனுப்பி வைக்கப்ட்டு எனது பரிசீலனைக்குப்பின் தான் பிரசுரிக்க வேண்டும். ஒவ்வொரு மாத இதழையும் நானே முழுமையாகத் தயாரித்துக் கொடுப்பேன். அதற்கு மேல் விளம்பரம் தவிர வேறு எதனையும் சேர்க்கக் கூடாது. அதில் ஏற்படும் எந்த ஒர கருத்துக்கும் நானே முழு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன்.
குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக எதனையும் எழுதிடமாட்டேன். அதை நீங்கள் முழுமையாக நம்பலாம். கிஸ்ஸாக்கள் போன்றவை இடம் பெறாமல் நான் பார்த்துக் கொள்வேன். பத்திரிக்கை நடத்துவதற்கென்று ஒரு சின்ன அலுவலகம் வேண்டும். அது எனது முழு எழுத்துப் பணிக்காக ஒதுக்கித் தரப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் 10ம் தேதியன்று இதழை தயார் செய்து நிர்வாகியிடம் நான் கொடுக்க வேண்டும். அவர் 30ம் தேதிக்குள் அச்சிட்டு முதல் தேதிக்கு வினியோகிக்க வேண்டும். நான் குறிப்பிட்ட ஒரு இடத்தில் தங்கி இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்தக் கூடாது. 10ம் தேதிக்குள் இதழ் தயாரிப்பது மட்டுமே எனது கடமையாக இருக்க வேண்டும். நான் வெளியூர் சுற்றுப் பயணங்கள் செய்வதும், மற்ற சேவைகளும் என் விருப்பத்தைப் பொருத்தது என்று முடிவு எடுக்க வேண்டும். எனது பணிக்காக காலத்தை உணர்ந்து தருகின்ற ஊதியத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனை நீங்கள் நிர்ணயம் செய்யலாம். எனக்குத் துணையாக இன்னொரு மவ்லவியை ஏற்பாடு செய்து கொள்ள அனுமதித்தால் பணி இன்னும் எளிதாக இருக்கும்.
மேற்கூறிய பிரச்சனைகளுக்கு உடனடியாக உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். இவ்வளவு கறாராக எழுதுகிறேன் என்று எதுவும் எண்ண வேண்டாம். வருங்காலத்தில் பிரச்சனை தோன்றக் கூடாது என்பதற்காகவே முன் கூட்டியே இதனை முடிவு செய்ய விரும்புகிறேன். எனது கடமைக்கும் அதிமாகவே பணியாற்றும் ஆர்வம் எனக்கு உண்டு. சந்தா சேர்ப்பதில் இருந்த எல்லாப் பணிகளிலும் நான் துணை நிற்பேன் என்றாலும், அது என்மீது கட்டாயமாக்கப்படக் கூடாது. தாமதமின்றி உங்கள் பதிலை எதிர் நோக்குகிறேன்.
அண்ணன் எழுதவும் முடியாத அளவுக்கு உடல் நலம் குன்றியுள்ளனர். நான் மட்டுமே பொறுப்பை ஏற்கிறேன். காரைக்கால் குமர் விஷயமாக 2,000/-உதவி செய்துவிட்டு அதன் அத்தாட்சிகளை அனுப்பினேன். அது கிடைத்ததா? என்பதை எழுதவும். மேலும் 3,000/- என்னிடம் அண்ணன் தந்துள்ளார்கள். வெகுவிரைவில் தகுதியான, குமர்களுக்கு வழங்கிவிட்டு அதன் அத்தாட்சிகளை அனுப்பி வைக்கிறேன்.
நான் மிகவும் விரும்பிக் கொண்டிருந்த பதாவா இப்னு தைமிய்யாவை அனுப்பி வைத்ததற்கு நன்றிகள் பல. இரண்டொரு நாளில் இன்ஷhஅல்லாஹ் அது எனக்கு கிடைத்து விடும்.
நமது பத்திரிக்கை அலுவலகத்திற்கென்று ஸிஹாஹ் சித்தாவும், முஸ்னது அஹமதும் தேவை. தப்ஸீர் மனார் இருந்தால் நலம்.
நீங்கள் அனுப்பிக் கொண்டுள்ள ஜெராக்ஸ் காப்பிகளில் பல மிகவும் பயனுள்ளவை. நமது பத்திரிக்கையில் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற தனியாக சேர்த்து வைத்துள்ளேன்.
அல் அஹாதீதுல் லயீஃபா வல் மவ்ழுவ் என்ற நூலை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
பிறபின் அன்புடன் P.J. பி.ஜே.யின் இந்தக் கடிதத்தில் ஹை லைட் செய்யப்பட்டுள்ளவை யாவும் அந்நஜாத் துவங்குவதற்கு முன்பே பிரச்சனை வந்து விட்டது என்பதற்குரிய ஆதாரங்களாகும். சற்று சிந்தித்தால் பிரச்சனைகள் என்ன என்பதும் புரியும். நிர்வாகி என்ற முறையில் அபூஅப்துல்லாஹ் கறாராக இருந்துள்ளார்.
குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக எதனையும் எழுதிடமாட்டேன். அதை நீங்கள் முழுமையாக நம்பலாம். என்று பி.ஜே. எழுதியுள்ளதிலிருந்து அப்பொழுது பி.ஜே. முழுக்க முழுக்க குர்ஆன் ஹதீஸ் உடையவராக இருக்கவில்லை என்பதை உணரலாம். எனது பணிக்காக காலத்தை உணர்ந்து தருகின்ற ஊதியத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனை நீங்கள் நிர்ணயம் செய்யலாம். என்றும் எழுதியுள்ளார். பி.ஜே. சம்பளத்திற்குத்தான் அந்நஜாத்தில் சேர்ந்துள்ளார் என்பதற்குரிய ஆதாரமான இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. துபை ஜமாஅத்தில் சம்பளம் பேசித்தான் தவ்ஹீது பணிக்கு பி.ஜே. வந்தார் என்பதற்கும் இது ஆதாரம். அது மட்டுமல்ல 'எனது பணிக்காக காலத்தை உணர்ந்து தருகின்ற ஊதியத்தை.. என்ற வார்த்தையில் உள்ள அழுத்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது கூடுதல் சம்பளம் வேண்டும். அதுதான் உணர்ந்து தருகின்ற ஊதியம் என்பதற்குரிய பொருள். 17-01-1986இல் பி.ஜே. எழுதிய மேலே உள்ள கடிதத்தைப் பார்த்த நீங்கள் 18-01-1986இல் பி.ஜே. எழுதியுள்ளதையும் கீழே தந்துள்ளோம் பாருங்கள். துபையிலிருந்த பொதக்குடி குத்புத்தீன் அவர்களுக்கு மேற்கண்ட கடிதத்தை அனுப்பிய பி.ஜே. ஒரு நாள் இடைவெளி கூட இன்றி மறுநாள். 18-01-1986 அன்று எழுதிய கடிதம். 18.1.86 பேரன்புச் சகோதரர் குத்புத்தீன் அவர்களுக்கு P.J. யின் அஸ்ஸலாமு அலைக்கும். நலம் நலம் பல சூழ்க.
நீங்கள் அண்ணன் P.S. அவர்களுக்கு H. குத்புத்தீன் சம்பந்தமாக எழுதியது இன்றுதான் எனக்கு கிடைத்தது. அதற்கு முன்பே அந்த நூல்களுக்காக 1000/- ரூபாய் டூட்டி கட்டி அதனை எடுத்துவிட்டார். SIM அலுவலகத்தில் 1000/- கடன் வாங்கித்தான் H. குத்புத்தீன் அதனை டெலிவரி எடுத்தார். அது தற்போது SIM அலுவலகத்தில் உள்ளது.
அண்ணனின் உடல் நிலை நீங்கள் நினைப்பது போல் இல்லை. அதை எல்லாம் விட பல மடங்கு மோசமான நிலையில் உள்ளது. அதன் விபரம் உங்கள் தம்பியின் கேஸட் மூலம் தெரிந்து கொள்க!
பத்திரிக்கை விஷயம் எனக்கு சரிப்பட்டு வராது என்றே தோன்றுகிறது. காரணம், எழுத்து உரிமையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே அபூஅப்துல்லாஹ் அவர்கள் விரும்புகிறார்கள். நானோ, எழுத்து விஷயத்தில் முழு சுதந்திரம் தந்தால் மட்டுமே ஏற்க முடியும் என்று கருதுகிறேன். இருவரின் கொள்கைகள் ஒன்றுதான் எனினும் அணுகுமுறைகளில் எங்கள் இருவருக்கும் நிறைய வேறுபாடு உண்டு. எனவே இப்படி ஒரு சூழ்நிலையில் நீங்கள் அபூஅப்துல்லாஹ் அவர்களையே ஆசிரியராகக் கொண்டு நடத்தலாம். அவருக்கு அந்த திறமை உண்டு. தக்லீதையே அடிப்படையாகக் கொண்டு ஒரு பத்திரிக்கை நடத்துவதும் அவசியமானதுதான்.
நான் ஆசிரியராக இருந்து கொண்டு, எனது எண்ணங்களை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சொல்வதற்கு முழு சுதந்திரம் வேண்டும் என்பதுதான் எனது நிலைமை. பினாமி ஆசிரியராக இருப்பதற்கு எனக்கு விருப்பம் கிடையாது. திருச்சியில் 26ஆம் தேதி கூட இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் இதனை நான் தெளிவாக சொல்லிவிட எண்ணியுள்ளேன்.
மற்றபடி எங்கள் சேவைகளை எல்லாம் அவர்களிடம் எடுத்துச் சொல்லும்படி எழுதி இருந்தீர்கள். அது எனக்கு விருப்பமில்லை.
எனது திறமை, நேர்மை சேவை மனப்பான்மை, ஆகியவற்றில் பத்திரிக்கை நடத்துவோருக்கு நம்பிக்கை இருந்தால், என் முழுப் பொறுப்பில் எழுத்துத் துறையை தரட்டும். பொருளாதார நிர்வாகத்தை அவர்கள் கவனிக்கட்டும்.
அவ்வாறு இல்லாவிடில் வேறு தகுந்த நபர் ஆசிரியராகட்டும், என்னால் முடிந்த ஒத்துழைப்பு தருகிறேன் (வெளியிலிருந்து கொண்டு), இது நான் நீண்ட நாள் யோசித்தபின் எடுத்த முடிவாகும். என் இறுதி நிலை இதுதான். அன்புடன் P.J. 17ஆம் தேதி எழுதிய கடிதத்தில், 'எனது பணிக்காக காலத்தை உணர்ந்து தருகின்ற ஊதியத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனை நீங்கள் நிர்ணயம் செய்யலாம்' என்று எழுதியுள்ளார். மறுநாள் 18 ஆம் தேதி பத்திரிக்கை விஷயம் எனக்கு சரிப்பட்டு வராது என்றே தோன்றுகிறது என்று எழுதியுள்ளார். அப்படி எழுதியவர் இது நான் நீண்ட நாள் யோசித்தபின் எடுத்த முடிவாகும் என்றும் எழுதியுள்ளார். ஒரு நாள் இடைவெளி கூட இன்றி மறு நாள் மாற்று முடிவை எழுதியவர் தனது முடிவுக்கு வலு சேர்க்க நீண்ட நாள் யோசித்தபின் எடுத்த முடிவாகும் என்ற பொய்யை எழுதியுள்ளார். இப்படித்தான் ஒவ்வொரு விஷயங்களிலும் அழுத்தமான பொய்களைக் கூறி தனது தரப்பை நிலை நிறுத்தி வருகிறார். நீண்ட நாள் என்பது பி.ஜே.யின் அகராதியில் 24 மணி நேரத்திற்கு உட்பட்டதோ?
தக்லீதையே அடிப்படையாகக் கொண்டு ஒரு பத்திரிக்கை நடத்துவதும் அவசியமானதுதான் என்ற எழுத்தின் மூலம் அப்பொழுது பி.ஜே. தக்லீதில் தெளிவில்லாதவராக மத்ஹப்களை விமர்சிக்காதவராகத்தான் இருந்தார் என்பதை அறியலாம். இறுதி நிலை இதுதான் என்று எழுதியவரை எது மாற்றியது என்றால் துபை பணம்தான். துபை ஜமாஅத்தில் சம்பளம் பேசி தவ்ஹீது பிரச்சார வேலைக்கு வந்தவர்தான் பி.ஜே. மார்க்கத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் கூட்டமே என்று சுன்னத் ஜமாஅத் மவுலவிகளைப் பார்த்து அன்று கர்ச்சித்தவர் பி.ஜே. இன்று அந்த பி.ஜே.யின் குடும்பமே தவ்ஹீதின் பெயரால் வாழ்ந்து வருகிறது.
பி.ஜே. கைப்பட எழுதிய மேற்கண்ட கடித காப்பிகளை பெற விரும்புபவர்கள் அந்நஜாத் ஆசிரியர் அபு அப்துல்லாஹ் அவர்களை தொடர்பு கொள்ளவும். 00919443955333. லுஹாவும் சம்பளம் பேசி தவ்ஹீது வேலைக்குச் சேர்ந்தவர்தான் என்பதற்கு அவர் துபை ஐ.ஏ.ஸிக்கு எழுதிய 13 பக்க யானைக் காது கடிதம் ஆதாரமாகும். http://mdfazlulilahi.blogspot.com/2002/08/13-2.html



'அந்நஜாத்'துக்கு பி.ஜே. அனுப்பிய ராஜினாமா கடிதம்.
அந்நஜாத்திலிருந்து விலகியது ஏன்? என்பதை எப்படி வெளியிட வேண்டும்? அந்நஜாத் நிர்வாகக் குழுவுக்கு பி.ஜே. எழுதியுள்ள கடிதம்.





அந்நஜாத்திலிருந்து பி.ஜே. ராஜினாமா செய்ததற்கான உண்மை காரணத்தை வெளியிடாமல் பி.ஜே. எழுதியுள்ள இந்த கடிதத்தின் அடிப்படையில் பொய்யான காரணத்தை அன்று வெளியிட்டார்கள். அப்படி வெளியிட்டவர்களில் இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டவர்களை தவிர ஒவ்வொருவரும் பி.ஜே. ஒவ்வொருவரு ராஜினாமாவின் பின்னால் கூறி வரும் பொய்யான காரணங்களின் பாவத்திலும் பங்கு பெற்று வருகின்றனர்.