Wednesday 14 May 2008

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


ஹயாத்துஸ் ஸஹாபா

சயீது பின் ஆமிர் பின் ஜித்யம் அல்ஜூமஹிய்யி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் சம்பவம். அன்னார் ஹிம்சினுடைய கவர்னராக இருந்த போது அவர்களின் வாழ்வின் நிலை.

காலித் பின் மஃதான் என்பவர் அறிவிப்பதாவது : உமர் (ரலி) அவர்கள் எங்களுக்கு ஹிம்சில் சயீத் பின் ஆமிர் பின் ஜித்யம் அல்ஜூமஹிய்யி (ரலி) என்ற ஸஹாபியை கவர்னராக்கினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஹிம்சுக்கு வந்த சமயம் ஹிம்சுவாசிகளே ! உங்கள் கவர்னரை எப்படி பெற்றுக் கொண் டீர்கள் என்று கேட்டதும், அவர்களிடம் தம் கவர்னரை பற்றி முறையிட்டார் கள். ஹிம்சு மக்களுக்கு சிறிய கூஃபாவாசிகள் என்று சொல்லப்படும். அவர் களும் கூபாவாசிகள் போன்று தங்கள் அமீரை முறையிடுபவர்களாக இருந்ததால் இவ்வாறு பெயர் வந்தது.

ஹிம்சு வாசிகள் நாங்கள் நான்கு குறைகளை முறையிடுகிறோம் என்று சொன்னார்கள். பகலில் வெகு நேரம் கழிந்த பின்பே தன் பணிக்கு வருகிறார் என்று சொன்னார்கள். பெறும் தவறு இது என்று உமர் (ரலி) அவர்கள் கூறி வேறென்ன ? என்று கேட்டார்கள். இரவில் யாருடைய அழைப்பையும் கேட்பதில்லை என்று கூறினார்கள். அதற்கு இது ஒரு பெரிய தவறு என்று சொல்லி, இன்னும் என்ன குற்றச்சாட்டு என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் மாதத்தில் ஒரு நாள் அவர் எங்களிடம் வருவதில்லை என்று கூறினார்கள். இதுவும் பெரிய குற்றம் என்று கூறி, அடுத்து என்ன என்று கேட்டார்கள். அதற்கவர்கள் சில நேரங்களில் மவுத் ஆனது போன்று சுயநினைவற்று இருக்கிறார்கள் என்று கூறினார்கள்.

உடனே உமர் (ரலி) அவர்கள் அந்தக் கவர்னரையும், மக்களையும் ஒன்று கூட்டி, யா அல்லாஹ் ! என்னுடைய கணிப்பை தவறாக்கி விடாதே என்று துஆ செய்து விட்டு இவரைப் பற்றி என்ன முறையிடுகிறீர்கள் என்று கேட்டார்கள்.

அதற்கவர்கள் பகலில் வெகுநேரம் கழிந்த பின்பே எங்களிடம் வருகிறார் என்று கூறினார்கள். அதற்கு ஸயீத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக ! இதற்குறிய காரணத்தைச் சொல்ல நான் விரும்பவில்லை தான். எனினும் நிர்பந்தத்தின் காரணமாக கூறுகிறேன் என்று சொல்லி என் வீட்டினருக்கு வேலைக்காரர் யாருமில்லை எனவே நானே மாவு பிசைந்து பின்பு, ரொட்டி தயார் செய்து சாப்பிட்டு விட்டு, ஒளு செய்தவனாக இவர் களிடம் வருவேன். என்பதைக் கூறினார்கள்.

மேலும் இவரைப் பற்றி என்ன முறையிடுகிறீர்கள் என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் இரவில் யாருடைய அழைப்பையும் ஏற்பதில்லை என்று கூறினார்கள். இதற்கு என்ன காரணம் என்று கேட்டார்கள். அக்கார ணத்தை கூற நான் வெறுத்தாலும், சொல்கிறேன். நான் பகல் பொழுதை இவர்களுக்காகவும், இரவுப்பகுதியை அல்லாஹ்வுக்காகவும் ஒதுக்கி விட்டேன் என்று கூறினார்கள்.

மேலும் என்ன முறையிடுகிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கவர் கள், மாதத்தில் ஒரு நாள் தன் பணிக்கு வரமாட்டார் என்று கூறினார்கள். இதற்கென்ன காரணம் என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். என் ஆடைகளைத் துவைக்க வேலைக்காரர்கள் யாருமில்லை, மேலும், மாற்றிக் கொள்வதற்கு வேறு ஆடை இல்லை. எனவே (அந்நாளில்) நான் துவைக்க உட்காருவேன். பின்பு அது காய்ந்ததும் (அது முரட்டு ஆடை என்பதால்) அதில் ஏற்பட்ட சுருக்கங்களை தேய்த்துத் தேய்த்து சரி செய்வேன். பின்பு மாலையில் தான் அவர்களிடம் வருவேன் என்று கூறினார்கள்.

வேறு என்ன இவரைப் பற்றிக் குறை கூறுகிறீர்கள். என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் சில நேரங்களில் சுயநினைவற்று பைத்தியம் போன்று இறுக்கிறார் என்று கூறினார்கள். இதற்கு என்ன கூறுகிறீர்கள் என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். உமைர் (ரலி) அவர்கள் நான் ஒரு நாள் குபைப் அன்சாரி (ரலி) என்ற ஸஹாபி மரணமான இடத்தில் மக்காவில் இருந்தேன். குரைஷியர்கள் அந்த சஹாபியின் உடலிலுள்ள சதையை வெட்டி, வெட்டி, எடுத்தார்கள். பின்பு அவர்கள் ஈச்ச மரத்தின் சிலுவையில் அறைந்தார்கள். மேலும் உன்னுடைய இந்த இடத்தில் முஹம்மதை நிருத்தி சிலுவையில் அறைவதை விரும்புகிறீரா என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த சஹாபி அல்லாஹ்வின் மீது சத்தியமாக ! நான் என் மனைவி மக்களுடன் சந்தோஷமாக இருக்க முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உடலில் ஒரு முள் தைப்பதைக் கூட பிரியப்பட மாட்டேன் என்று சொல்லிவிட்டு, முஹம்மதே ! என்று சப்தமிட்டு அழைத்தார். அந்த நாளை நான் நினைத்துப் பார்த்து, மேலும் அந்நிலையில் அந்த சஹாபிக்கு நான் உதவி செய்யாமலிருந்ததையும் நினைத்துப் பார்ப்பேன். நிச்சயமாக அத்தவறுக்காக ஒரு போதும் அல்லாஹ் என்னை மன்னிக்க மாட்டானோ என்று நினைப்பேன். உடனே அவ்வாறு சுயநினைவற்ற நிலை எனக்கு ஏற்பட்டு விடும் என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் நான் கணித்து முடிவு செய்ததை தவறாக்கி விடாத அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று சொல்லி 1000 தீனார்களை அவருக்குக் கொடுத்தனுப்பி உங்கள் தேவைகளுக்கு இதன் மூலம் உதவி பெற்றுக் கொள்ளவும் என்று கூறினார்கள்.

உடனே அவர்களின் மனைவி உங்களுக்குப் பணிவிடை செய்யும் வேலையை நம்மை விட்டும் நீக்கினானே அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறினார்கள். அப்போது ஸயீத் (ரலி) அவர்கள் தன் மனைவியிடம் உனக்கு இதைவிட சிறந்த வழி முறையை சொல்லட்டுமா ? என்று கூறி, நமக்கு அதிகமான தேவை வரும் சமயத்தில் அந்த தீனார்களை நம்மிடம் தந்து விடுவாரே அந்த மனிதரிடம் கொடுத்து வைப்போமா ? என்று கேட்டார்கள். அவர்கள் சரி என்று கூறினார்கள்.

உடனே தன் குடும்பத்தினரில் நம்பிக்கையான ஒரு மனிதரை அழைத்து அந்த தீனார்களை சிறிய சிறிய பைகளில் போட்டு இதைக் கொண்டு சென்று இன்னாரின் குடும்பத்தாரில் உள்ள விதவைப் பெண்களுக்கும், இன்ன குடும்பத்திலுள்ள ஏழைகளுக்கும், இன்ன குடும்பத்தில் சோதனைகளில் சிக்கிய வர்களுக்கும் கொடுத்து வருவாயாக. அதில் சில தங்கக்காசுகள் மீதமானது அவைகளை உன் தேவைக்கு வைத்துக்கொள். என்று தன் மனைவியிடம் கூறிவிட்டு தன் பணிக்குத் திரும்பி விட்டார்கள். அவர்களின் மனைவி அந்தப் பணம் என்ன ஆனது ? நமக்கு வேலைக்காரர்களை வாங்கவில்லையா என்று கேட்டார்கள். அதற்கு, நீ அதிகத் தேவையுள்ளவளாக இருக்கும் போது உன்னிடம் வருவாள் என்பதாக கூறினார்கள்.

நூல்:அல்ஹில்யா, ஹ.ச-185,186-2


இதுவே நமது முன்னோர்களாகிய ஒவ்வொரு உத்தம சத்திய சஹாபாக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் சம்பவமாகும். ஒவ்வொரு சஹாபாக்களின் வாழ்க்கை முறையும் அல்லாஹ்வின் பொருத்தத்திற்குரியதாகவும் மறுமையை நோக்கமாகவும் கொண்டதாகவே அமைந்திருந்தது. அவ்வுத்தமர்களின் வாழ்க்கை முறையையும் நமது வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு நாம் நல்லுணர்வு பெறவேண்டும். அவ்வுத்தமர்கள் பெற்ற நேர்வழியை நாமும் அடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக !

இவன்.
முஹம்மது பதுருதீன்.

No comments: